/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 22, 2025 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
'போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு விழிப்புணர்வு' எனும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார்.
பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை ஒழிப்பது குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பள்ளி முதுநிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி, இணைச் செயலாளர் நிட்டின் ஜோஷ்வா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.