ADDED : செப் 26, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாதிரிக்குப்பம் மாதர் நலத் தொண்டு நிறுவனம், புதிய பாதை மதுபோதை மறுவாழ்வு மையம் மற்றும் மாவட்ட சமூக குழந்தை பாதுகாப்பு நிறுவனம் ஆகியன இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அரசு தொழிற்பயிற்சி நி லைய துணை இயக்குனர் பரமசிவம், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மாவட்ட சமூக குழந்தை பாதுகாப்பு அலகு சித்ராபதி, காளிதாஸ், எம்.என்.டி.என்., நிறுவனர் ராஜேந்திரன், லீமா ராஜேந்திரன் பங்கேற்றனர். பொம்மலாட்டக் குழுவினர், பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.