ADDED : நவ 09, 2025 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் இன்ஸ்பெக்டர் வேலுமணி கலந்து கொண்டார். அவர், மாணவர்கள், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் பல குடும்பங்கள் வீணாகிறது; பெற் றோர் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்; பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்; என அறிவறுத்தினார். மேலும் அவர் போக்சோ சட்டம் குறித்தும் மாணவர்களிடம் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அறிவழகன்,தலைமையாசிரியர் ஆனந்த் பாஸ்கரன், நிமிலன், தீபக் கலந்து கொண்டனர்.

