/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
/
அரசு கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
ADDED : பிப் 01, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் போட்டித் தேர்வுகள்- புதிய அணுகுமுறைகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கினார். சமூக பணியியல் துறைத் தலைவர் சேதுராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, திருச்சி கோட்ட ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார் பங்கேற்று பேசினார். வருமான வரித்துறை ஆய்வாளர் அரவிந்தன், மாநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் சுதர்சனம் வாழ்த்தி பேசினர். மாணவி ஹேமா விழாவை தொகுத்து வழங்கினார்.
வணிகவியல் துறைத் தலைவர் முருகதாஸ் நன்றி கூறினார்.