/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் தி.மு.க., சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு
/
கடலுாரில் தி.மு.க., சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு
கடலுாரில் தி.மு.க., சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு
கடலுாரில் தி.மு.க., சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு
ADDED : அக் 07, 2024 07:00 AM

கடலுார்: கடலுாரில் மாநகர தி.மு.க., மற்றும் காவல் துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி வழக்கறிஞர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு, போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதைப் பொருளுக்கு பொதுமக்கள் முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து கட்டுப்படுத்த உதவ வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, பேசுகையில் சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது, மாநகராட்சி கவுன்சிலர் ராஜமோகன், பகுதி துணை செயலாளர் லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.