ADDED : ஜன 12, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயக்குமார் தலைமை தாங்கினார். வேப்பூர் இன்ஸ்பெக்டர் சசிகலா சிறப்பு பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் உள்ளிட்டவை குறித்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.