/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டியிடம் அத்துமீறல் போதை வாலிபர் கைது
/
மூதாட்டியிடம் அத்துமீறல் போதை வாலிபர் கைது
ADDED : ஏப் 12, 2025 05:27 AM

விருத்தாசலம் : மூதாட்டியிடம் அத்துமீறிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆலந்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி பாவாயி, 57. நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற வாலிபர் ஒருவர், மூதாட்டி வாயை பொத்தி, புதருக்குள் துாக்கிச் சென்றார்.
அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு, வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் சு.கீனனுார் வேல்முருகன் மகன் அய்யப்பன்,21, என்பதும், மது போதையில், மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதை ஒப்புக் கொண்டார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.