ADDED : நவ 24, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி மற்றும் மருதுார் காவல் நிலையங்களில் சிதம்பரம் உட்கோட்ட டி.எஸ்.பி., லாமேக் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை முடிப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து கோப்புகளை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து வைக்கவும், பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும், குற்ற சம்பவம் தடுக்கவும், தேவையான பகுதியில் உரிய பாதுகாப்பு அளிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.