/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாமந்தி பூக்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் நிலங்களில் கொட்டி அழிப்பு

ADDED : அக் 05, 2024 04:22 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரியில் பயிரிட்டுள்ள சமாந்தி பூக்களுக்கு போதிய விலையில்லததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் நிலத்தில் கொட்டி அழித்து வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெரு, ஆனைவாரி பைபாஸ் சாலை அருகே உள்ள விவசாயிகள் நிலங்களில் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
மாலைகளுக்கும், உதிறி பூக்களுக்காக வாங்கப்படும் சாமந்தி பூக்களை வியாபாரிகள் போதி விலை கொடுத்து கொள்முதல் செய்ய முன்வரவில்லை. ஏக்கருக்கு ஒரு சாமந்திப்பூ செடி இரண்டு ரூபாய் வீதம் ஆயிரம் செடிகளை 15 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்து நடவு செய்துள்ளனர்.
நடவு செய்த நாள்முதல், உரமிடுதல், களை எடுத்தல், மருந்து தெளித்தல் ஏன 20ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளனர்.
நிலங்களில் அதிகளவில் விளைந்துள்ள சாமந்தி பூக்களுக்கு தற்போது போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அன்றாடம் பூக்கும் சாமந்தி பூக்களை அன்றே பறிக்க வில்லை என்றால் செடி பாதிக்கும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் ஆட்களை சம்பளம் கொடுத்து சாமந்த பூக்களை பறித்து வீணாக நிலங்களில் கொட்டி அழித்து வருகின்றனர்.