ADDED : ஏப் 21, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் ஈஸ்டர் தினத்தையொட்டி கடலுாரில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஈஸ்டர் தினத்தையொட்டி கடலுார் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பாடல்களை பாடினர்.
சிறப்பு திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதே போன்று கடலுார் சப் ஜெயில் சாலையில் உள்ள துாய எபிபெனி ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை, திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

