/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
/
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 07, 2025 01:54 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மீனவர் பிரிவு இணை செயலாளர் ஜெயபால், அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் சுந்தர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசுகையில், ' அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தோடு வரும் 16 ம் தேதி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் ரங்கம்மாள், செல்வம், தேன்மொழி, சிங்கார வேல், கர்ணா, ரங்கசாமி, அசோகன், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், சிவக்குமார், நவநீதகிருஷ்ணன், ஜோதிபிரகாஷ், தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொதுமக்களை சந்தித்து கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கோபி நன்றி கூறினார்.