ADDED : மார் 11, 2025 06:19 AM
கடலுார்: கடலுார், திருப்பாதிரிபுலியூர் தேரடி தெருவில் கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கும் மத்திய அரசின் சதியை மக்களிடம் எடுத்துக் கூறவும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்கவும், கடலுார் கிழக்கு மாவட்டத்தில், 'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நாளை (12ம் தேதி) மாலை 5:00 மணியளவில் கடலுார் திருப்பாதிரிபுலியூர் தேரடித் தெருவில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., கோவி.லெனின் சிறப்புரையாற்றுகின்றனர்.
இக்கூட்டத்தில் கடலுார் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் கிளை வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.