ADDED : ஜூலை 19, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
மாவட்ட நிர்வாகி விநாயகம் தலைமை தாங்கினார். சட்டசபை தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத், நிர்வாகிகள் செல்வராஜ், நாகராஜ், அருள்ஜோதி, மாசிலாமணி, ரஹ்மத்துல்லா, மணிவண்ணன், பக்கிரிசாமி, ரவி முன்னிலை வகித்தனர்.
பன்னீர்செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். விழாவில், வட்டார இளைஞர் காங்., தலைவர் சரவண முத்து, பாலமுருகன், ராமலிங்கம், மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.