/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகளுக்குள் ஈகோ... 6 மாதத்தில் இன்ஜினியர் துாக்கியடிப்பு
/
அதிகாரிகளுக்குள் ஈகோ... 6 மாதத்தில் இன்ஜினியர் துாக்கியடிப்பு
அதிகாரிகளுக்குள் ஈகோ... 6 மாதத்தில் இன்ஜினியர் துாக்கியடிப்பு
அதிகாரிகளுக்குள் ஈகோ... 6 மாதத்தில் இன்ஜினியர் துாக்கியடிப்பு
ADDED : பிப் 27, 2024 11:52 PM
நெல்லிக்குப்பம் நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பணிகளை முழுமையாக கவனிக்க முடியாத நிலை உள்ளது.
குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர்கள், அலுவலக உதவியாளர்கள் என பல்வேறு பணிக்கு 10க்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
இதில் சிலர், பணியை செய்யாமல் உயர் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொள்வதுடன் முழு சம்பளமும் பெற்றுக் கொள்கின்றனர்.
இதை இன்ஜினியர் பாரதி ஏற்காமல் முறையாக வேலை செய்யாதவர்களுக்கு சம்பளம் வழங்க கையெழுத்து போட மறுத்துள்ளார்.
இதனால் தற்காலிக பணியாளர்களுக்கு ஆதரவான அதிகாரிகளுக்கும் இன்ஜினியர் பாரதிக்கும் மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரச்னை இருந்து வந்தது. இன்ஜினியர் பாரதி நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியில் சேர்ந்து 6 மாதங்களில் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க தனி கவனம் செலுத்தி நல்ல பெயர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகளிடம் ஏற்பட்ட பிரச்னையால் நெல்லிக்குப்பம் நகாட்சியில் பணியில் சேர்ந்த 6 மாதத்தில் இன்ஜினியர் பாரதி, திடீரென கடலுார் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார்.
இது, முறையாகவும், நேர்மையாகவும் பணியாற்றும் அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

