ADDED : செப் 05, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம், 65; இவர், வீட்டில் தனியாக இருந்த 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று ஆறுமுகத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.