UPDATED : நவ 24, 2026 06:08 PM
ADDED : நவ 24, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மனைவி பேசாததால் மனமுடைந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மங்கலம்பேட்டை அடுத்த எடைச்சித்துாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்,65; இவரது மனைவி நாதாயி,55; தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தார்.
அதில், விரக்தியடைந்த ஆறுமுகம், கடந்த 20ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
