/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயிலில் தவறி விழுந்து முதியவர் பரிதாப பலி
/
ரயிலில் தவறி விழுந்து முதியவர் பரிதாப பலி
ADDED : அக் 23, 2025 12:51 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் அடுத்த பூவனுார் ரயில்வே கேட் அருகே, ரயில் பாதையொட்டி, நேற்று காலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், அவர், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், முத்துசாமி மகன் ஜெயமுருகன், 50; என்பதும், சொந்த ஊரான கோவில்பட்டிக்கு, கடந்த 20ம் தேதி தாம்பரம் - நாகர்கோவில் ரயிலில் சென்றபோது தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து அவரது மகன் சூர்யா, 24; கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.