ADDED : அக் 16, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன் மகன் ராமதாஸ், 62. இவர், அங்குள்ள குளிர்பான கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள இரும்புக் குழாயை தொட்டபோது, எதிர்பாறாத விதமாக மின்சாரம் தாக்கியது.
அப்போது, அவரை காப்பாற்ற முயன்ற புதுநெசவாளர் தெரு கிருஷ்ணசாமி மகன் சக்கரபாணி என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இருவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராமதாஸ் வழியிலேயே இறந்தார். சக்கரபாணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.