ADDED : செப் 19, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி இறந்தார்.
பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் அடுத்த பாலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை,76. இவர் அரியலுார் ரயில் நிலையத்திற்கும் – சில்லக்குடி ரயில் நிலையத்திற்கும் இடையே, நுாறுநாள் வேலைக்கு செல்ல, நேற்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார்.
விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
