ADDED : அக் 05, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் முதுநகர் அருகே லாரியுடன் கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம், ஆர்ம்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார்,70. இவர் நேற்று காலை தனது மனைவி கீதாபாய்,64, உடன் கடலுாருக்கு காரில் வந்தார். காரை சென்னையைச்சேர்ந்த டிரைவர் குப்புராஜ்,50, ஓட்டிவந்தார்.
காலை 9மணிக்கு கடலுார் -சிதம்பரம் சாலையில், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு காலி மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியுடன், கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மூவரும் காயமடைந்தனர். இதில் ராஜ்குமார் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.