ADDED : அக் 25, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தீக்காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார், வண்டிப்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் தமிழ்தாஸ் மனைவி சுப்புலட்சுமி, 69; இவர், கடந்த 10ம் தேதி வண்டிப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அருகில் இருந்த விளக்கில் மூதாட்டியின் சேலை பட்டு தீ பரவியது.
இதில், தீக்காயமடைந்த சுப்புலட்சுமி சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

