ADDED : மே 21, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மனைவி வள்ளி, 70. இவர் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள டி.வி.புத்துார் பஸ் நிறுத்தம் அருகே இயற்கை உபாதை கழிக்க நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், வள்ளி மீது பலமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.