/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மின் விசிறிகள்' பொருத்தம்: ரயில் பயணிகள் மகிழ்ச்சி
/
'மின் விசிறிகள்' பொருத்தம்: ரயில் பயணிகள் மகிழ்ச்சி
'மின் விசிறிகள்' பொருத்தம்: ரயில் பயணிகள் மகிழ்ச்சி
'மின் விசிறிகள்' பொருத்தம்: ரயில் பயணிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 10, 2025 08:47 AM

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடையில் மின் விசிறிகள் பொருத்தப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருச்சி - சென்னை ரயில் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சபார் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள், சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், சரக்கு என 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 9.50 கோடி ரூபாயில் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்தன.
அதன்படி, அலங்கார முகப்பு, ரயில்களின் வருகை தெரியும் வகையில் எலக்ட்ரானிக் டிஸ்பிளே, குடிநீர், கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமல்லாது நடைமேடைகளை விரிவாக்கம் செய்து, புதிதாக மேற்கூரை அமைக்கப்பட்டது.
ஆனால், புதிய மேற்கூரைகளில் மின்விசிறிகள் பொருத்தப்படாததால் ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமமடைந்தனர்.
இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, நடைமேடை 1, 2 மற்றும் 3, 4 ஆகிய நடைமேடைகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேற்கூரைகளில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டன.
இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

