/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையால் பயிர்கள் சேதம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
/
மழையால் பயிர்கள் சேதம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
மழையால் பயிர்கள் சேதம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
மழையால் பயிர்கள் சேதம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
ADDED : டிச 10, 2025 08:48 AM

புதுச்சத்திரம்: 'டிட்வா ' புயல் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை, கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.
' டிட்வா ' புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், நெல் பயிரிட்டுள்ள வயல்களில், தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அதையொட்டி தமிழக அரசு சார்பில், எக்டருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, நிலத்தின் உரிமையாளரை அந்த நிலத்தில் நிற்க வைத்து, போட்டோ எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதையொட்டி புதுச்சத்திரம் அடுத்த பூவாலை பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை உதவி வேளாண் அலுவலர் பிரேமலதா, வி.ஏ.ஓ., ரமேஷ் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

