/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கன மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்
/
கன மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்
ADDED : டிச 01, 2025 06:10 AM

ஸ்ரீமுஷ்ணம்: கன மழை காரணமாக சாய்ந்த, 3 மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் விருத்தாசலம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் நேற்று முன்தினம் மாலை வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதி அருகே சாலையோரம் இருந்த, 3 மின் கம்பங்கள் லேசாக சாய்ந்தன.
தகவலறிந்ததும் விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.
தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு பொக்லைன் உதவியுடன் சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து சில மணிநேரத்திற்கு பின்னர் அப்பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.

