/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு
/
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு
ADDED : டிச 01, 2025 05:39 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரப்பட்டுள்ள சி.முட்லுார் மண்டபம் பகுதி மழைநீர் வடிகால் வாய்க்கால், சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை, சிவகாமசுந்தரி ஓடை பகுதியில் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில் 493 கால்வாய்கள், 148 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்கள், 9 சிறிய மற்றும் பெரிய நீர் நிலைகள், 4.5 கி.மீ தொலைவுள்ள வாய்க்கால்கள், 6 நகராட்சிகளில் 941 கால்வாய்கள், 215.96 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்கள், 27 சிறிய மற்றும் பெரிய நீர் நிலைகள், 10 கி.மீ தொலைவுள்ள வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன.
பேரூராட்சி துறை மூலம் 509 கால்வாய்கள், 122.03 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்கள், 89 சிறிய மற்றும் பெரிய நீர் நிலைகள், நெடுஞ்சாலை துறை மூலம் 3,456 கால்வாய்கள், 200 சிறு பாலங்கள், 27 பெரிய பாலங்கள், 15.559 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்கள், நீர்வளத்துறை மூலம், 18 சிறிய மற்றும் பெரிய நீர் ஆதார அமைப்புகள், 95.50 கி.மீ தொலைவுள்ள வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன.
நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பராமரிக்கப்படும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் மழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

