/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுண்ணுரமாக்கல் மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
/
நுண்ணுரமாக்கல் மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
நுண்ணுரமாக்கல் மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
நுண்ணுரமாக்கல் மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : டிச 01, 2025 05:39 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் பெரியவடவாடி நுண்ணுரமாக்கல் மையத்தில், மரக்கன்றுகளை நடும் பணி துவங்கியது.
விருதாச்சலம் நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துாய்மையே சேவை, துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் நடந்து வருகிறது. இதில், திடக்கழிவு மேலாண்மை, மக்கும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்குதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பைகளை கொட்டும் இடத்தில் வண்ணக்கோலமிட்டு துாய்மையாக பராமரித்தல், துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
அதன்படி, பெரியவடவாடி நுண்ணுரமாக்கல் மைய வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் பணியை நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார். கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர்கள், துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உடனிருந்தனர். மா, பலா , நெல்லி, தென்னை மற்றும் பூச்செடிகள் நடப்பட்டன.

