/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ADDED : டிச 01, 2025 05:26 AM
கடலுார்: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவ மனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி ஆகிய இடங்களில் மாதந்தோறும் யு.டி.ஐ.டி., அட்டை வழங்கும் முகாம் நடந்து வந்தது.
சனிக்கிழமை தோறும் நடந்து வந்த, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், டிச., முதல் பிப்., வரை, மொத்தம், 28 முகாம்கள் பல வட்டாரங்களில் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான யு.டி.ஐ.டி., அட்டையினை டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

