/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்சாரத்தில் இயங்கும் ரயில்வே கேட்; நெல்லிக்குப்பத்தில் 4 இடங்களில் அமைப்பு

ADDED : டிச 24, 2024 07:59 AM

நெல்லிக்குப்பம்; ரயில் பாதையை வாகனங்கள் கடந்து செல்லும் இடங்களில் ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ரயில்கள் வரும்போது ரயில்வே பணியாளர்கள் கேட்டை மூடி, திறப்பது வழக்கம்.
இதற்கு காலதாமதம் ஆவதால், தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் 30 இடங்களில் மின்சாரத்தால் இயங்கும் கேட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் வெள்ள கேட், மேல்பட்டாம் பாக்கம் உட்பட 4 இடங்களில் மின்சாரத்தால் இயங் கும் ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் ரயில் வருவதற்கும், கடந்து சென்றதும் 12 விநாடிகளில் கேட்டை திறக்கவும், மூடவும் முடியும். ஒரு பட்டனை அழுத்தினால் கேட் தானாக திறக்கவும் மூடவும் செய்யும்.
இதனால், ரயில் கடந்து சென்ற பிறகு, உடனடியாக கேட்டை திறக்க முடியுமென்பதால் வாகன ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
இதுபோன்ற கேட் அமைக்க இடத்துக்கு ஏற்ப ரூ. 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.