UPDATED : அக் 07, 2026 05:19 AM
ADDED : அக் 06, 2026 09:36 PM

அ நிறம் | அளவு
வடலூர்: வடலுார் அருகே மின் கம்பி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார் அடுத்த கொளக்குடி, பெரிய ஏரி அருகில் நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர், கையில் ஆக்சா பிளேடுடன் நின்றுக் கொண்டிருந்தார். சந்தேகமடைந்த கிராம மக்கள், அந்த நபரை பிடித்து வடலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் பெரியாக்குறிச்சி, புதுநகர் ராமலிங்கம் மகன் சுரேந்தர்,27; என்பதும், அவரும் அவரது நண்பரான தர்மநல்லூர் அஜித் என்பவருடன் சேர்ந்து, மின் கம்பி திருடியது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சுரேந்தரை கைது செய்தனர். மேலும், அவர் திருடி பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 400 மீட்டர் மின்கம்பியை பறிமுதல் செய்தனர். அஜித்தை தேடிவருகின்றனர்.
