தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்துறை பணி பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 மின்துறை பணி பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 மின்துறை பணி பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூன் 21, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் மின்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

பூதங்குடி, தனியார் பள்ளியில் நடந்த முகாமிற்கு, எஸ்.கே.ஓய்., நிறுவனத்தின் மனவளக்கலை நிபுணர்கள், யோகா மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தி பதற்றமின்றி மின்துறையினர் பாதுகாப்புடன் பணி மேற்கொள்ள பயிற்சியளித்தனர்.

மேலும், சிதம்பரம் உட்கோட்ட மின்செயற்பொறியாளர் கண்ணகி, காட்டுமன்னார்கோவில் உட்கோட்ட செயற்பொறியாளர் அசோக் பிரசன்னா, சேத்தியாத்தோப்பு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பழனிவேல் ஆகியோர் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.

சிறப்பாக பணிகளை மேற்கொண்ட பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்களுக்கு மின்துறை அதிகாரிகள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். பொறியாளர்கள் பாரி, கணேசன், சார்லஸ், பிரபாகரன், ரங்கநாதன், விஜயபாபு, பிரியா மற்றும் பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us