/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்கட்டணம் செலுத்தாததால் மின் கட்டணம் இணைப்பு துண்டிப்பு
/
மின்கட்டணம் செலுத்தாததால் மின் கட்டணம் இணைப்பு துண்டிப்பு
மின்கட்டணம் செலுத்தாததால் மின் கட்டணம் இணைப்பு துண்டிப்பு
மின்கட்டணம் செலுத்தாததால் மின் கட்டணம் இணைப்பு துண்டிப்பு
ADDED : டிச 25, 2024 08:36 AM
சென்னை- கன்னியாக்குமரி தொழிற்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, கடலூரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இச்சாலையில், நெல்லிக்குப்பம் நகர பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.
அதன்படி, நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பண்ருட்டி, மாளிகைமேடு சாலை பிரியும் சந்திப்பு பகுதியில், ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்ட. ஆனால், அதற்கு முறையாக மின்வாரியத்துக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் அந்த லைட்டுக்கு செல்லும் மின் இணைப்பை மின்வாரியத்தினர் துண்டித்தனர்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், முக்கிய சந்திப்பான அப்பகுதி இரவில் இருட்டில் மூழ்கியுள்ள. இதனால், அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை.