/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : மே 27, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில் 15 பேருக்கு பெயர் மாற்ற ஆணை வழங்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
இதில் ஏராளமான நுகர்வோர் கலந்து கொண்டு பெயர் மாற்றம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
கூட்டத்தில், 15 பேருக்கு பெயர் மாற்ற ஆணையை மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் வழங்கினார். மற்ற கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனக் கூறினார்.
கோட்ட செயற் பொறியாளர் வள்ளி, உதவி செயற் பொறியாளர்கள் சசிக்குமார், பழனிவேலு, சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.