/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 23, 2025 09:24 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நெல்லிக்குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை 24ம் தேதி நடக்கிறது. நெல்லிக்குப்பம் கோட்டத்திற்குட்பட்ட நெல்லிக்குப்பம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், நத்தப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம், அழகியநத்தம், பள்ளிப்பட்டு, குட்டியாங்குப்பம், துாக்கணாம்பாக்கம், அருங்குணம், திருமாணிக்குழி.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, கீழ்மாம்பட்டு, பாலுார், முத்துகிருஷ்ணாபுரம், சித்தரசூர், அகரம், சிலம்பிநாதன்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், கவரப்பட்டு, கோழிப்பாக்கம், பகண்டை, அண்ணாகிராம், மாளிகைமேடு, ஆண்டிபாளையம் பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மின்துறை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம்.