/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2025 12:34 AM
திட்டக்குடி: திட்டக்குடியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நல்லதுரை, இணை செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., சங்க மின்வாரிய ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கடந்த 2023 முதல் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை அரசு துவங்க வேண்டும். மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை ரத்து செய்வது. மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலயுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. செயற்குழு நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.