/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் விபத்துக்களை தடுக்க மின்துறை விழிப்புணர்வு
/
மின் விபத்துக்களை தடுக்க மின்துறை விழிப்புணர்வு
ADDED : டிச 01, 2024 05:37 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் துணைமின் நிலையம் சார்பில், மழைக்கால மின் விபத்தை தவிர்க்க, மின் துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பெண்ணாடம் நகரம் உதவி பொறியாளர் வெங்கடேசன், போர்மேன் ரவிச்சந்திரன், மின்பாதை ஆய்வாளர் சந்திரன், ஒயர்மேன் கவாஸ்கர், மின்வாரிய ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மழைக்காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், மின் ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகே செல்லக்கூடாது, மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி அல்லது மின்னலின்போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். பேனர் மற்றும் கொடி கம்பங்கள் ஆகியவற்றை மின்வழி பாதைகளின் கீழோ அல்லது அருகில் நடந்து செல்லாதீர்கள் உள்ளிட்ட மின் பாதுகாப்பு குறித்து ஒலிப்பெருக்கி வாயிலாகவும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோன்று, மேலுார், மருதத்துார், மாளிகைக்கோட்டம், பெ.பூவனுார், இறையூர், கொத்தட்டை உட்பட பெண்ணாடம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் ஒலிப்பெருக்கி வாயிலாகவும், துண்டு பிரசுரம் வழங்கியும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

