/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்வாரிய தொழிற்சங்க குழு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய தொழிற்சங்க குழு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 05, 2024 05:27 AM

கடலுார் : கடலுார் சாவடியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் சம்மேள னம் சங்க மாநில செயலா ளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் தேசிங்கு, சம்மேளனம் சங்க இணை செயலாளர் பாலமுருகன், அண்ணா தொழிற்சங்க கோட்ட செயலாளர் ஹரி பிரசாத், செந்தில் குமார், செல்வம் முன்னிலை வகித் தனர்.
சி.ஐ.டி.யூ., மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல், அண்ணா தொழிற்சங்க திட்ட துணை செயலாளர் ராயல் ஜோதிநாதன், பாபு, இளவழகன், ரவிச்சந்திரன், ஜெயப்பிரகாஷ் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சரவணன், சக்திதாசன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தமிழ்நாடு மின் விநியோக கார்ப்பரேஷன் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் என, மூன்றாக பிரித்து தமிழக அரசு தன்னிச்சையாக வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

