ADDED : செப் 24, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடலுார் கேப்பர்மலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் தேசிங்கு தலைமை தாங்கினார்.
இணை செயலாளர்கள் தனசேகரன், ராஜி, கோட்ட செயற்குழு பொன்னழகன் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை செயலாளர் பழனிவேல், போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு, மாநில செயற்குழு ஆறுமுகம், கோவிந்தசாமி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.