ADDED : ஜூன் 21, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மின்வாரிய அலுவலகம் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஞானசேகரன், ஜோதிபாசு, அம்பிகாபதி, தேசிங்கு, முத்தழகு, தனசேகரன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே நடத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.