/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்னணு கணக்கெடுப்பு பணி வேளாண் துணை இயக்குநர் ஆய்வு
/
மின்னணு கணக்கெடுப்பு பணி வேளாண் துணை இயக்குநர் ஆய்வு
மின்னணு கணக்கெடுப்பு பணி வேளாண் துணை இயக்குநர் ஆய்வு
மின்னணு கணக்கெடுப்பு பணி வேளாண் துணை இயக்குநர் ஆய்வு
ADDED : செப் 03, 2025 07:13 AM

சேத்தியாத்தோப்பு : கீரப்பாளையம் பகுதிகளில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியை வேளாண் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள 57 வருவாய் கிராமங்களில் நெல், கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்திரி, வெண்டை சாகுபடி மின்னணு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
இந்த கணக்கெடுப்பு பணியினை, சர்வேயர்கள், வேளாண் அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் செய்து வரும் நிலையில் நேற்று கீரப்பாளையம் பகுதிகளில் வேளாண் துணை இயக்குநர் விஜயராகவன் ஆய்வு செய்தார்.
பின் வருவாய் கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களின் வகைகள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் குறித்து கேட்டறிந்து, புல எண்கள் விபரம், உட்பிரிவு, பணியினை துரிதமாக மேற்கொண்டு டி.சி.எஸ்., செயலியில் பதிவேற்றம் செய்து விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி னார்.
தொடர்ந்து வேளாண் திட்ட இலக்குகள் மற்றும் அவற்றின் முன்னேற்ற செயல் பாடு தற்போதைய நிலைகள் குறித்க ஆய்வு நடந்தது.
கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவப்பிரியன், உதவி விதை அலுவலர் வெற்றிச்செல்வன், உதவி வேளாண் அலுவலர்கள் புகழேந்தி, பயிர் அறுவடை பரிசோதனையாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.