/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு
/
ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு
ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு
ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு
ADDED : நவ 17, 2025 12:09 AM
கடலுார்: ஏரிகளின் மீன்பிடி உரிமை குத்தகைக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்திலுள்ள, 33 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட, மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள், மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை சார்பில் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம்.
மேலும் விவரங்களுக்கு 04144-243033 என்ற தொலைபேசி எண் மற்றும் adfparangipettai4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினை தொடர்பு கொள்ளலாம்.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள ஸ்ரீநெடுஞ்சேரி ஏரி, ஸ்ரீபுத்துார் ஏரி, குணமங்கலம் ஏரி, குன்னத்து ஏரி, புவனகிரி வட்டத்தில் உள்ள சூடாமணி ஏரி, வாலாஜா ஏரி, மதுவானமேடு ஏரி, மேலக்கொளக்குடி ஏரி, பண்ருட்டி வட்டத்தில் உள்ள சிறுவத்துார் ஏரி, கொளப்பாக்கம் ஏரி, வீரப்பெருமநல்லுார் ஏரி, மனம் தவிழ்ந்த புத்துார் ஏரி, எலந்தம்பட்டு ஏரி, திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஓ.கீரனுார் ஏரி, பூவனுார் ஏரி, தீவளூர் ஏரி, காரையூர் ஏரி, சிறுமுலை ஏரி, தாழநல்லுார் ஏரி, பெருமுலை ஏரி, மற்றும் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள தர்மநல்லுார், கோபாலபுரம் (எ) வண்ணத்தி ஏரி, கம்மாபுரம், விருத்தாசலம் கஸ்பா ஏரி, முகாசப்பருர், எடச்சித்துார், சத்தியவாடி, அலிச்சக்குடி, கார்கூடல், சாத்துக்கூடல், மங்களம்பேட்டை மற்றும் இளமங்கலம் ஆகிய ஏரிகள் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

