/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கம் ஆர்ப்பாட்டம்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியகங்கணாங்குப்பம் வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்தஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் சண்முகம், பிரவீன்ராஜ், ரோஜா, தலைமை தாங்கினர்.
ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ஜெகநாதன், வட்டார செயலாளர்கள் செந்தில்குமார், அருள்தாஸ், சவுந்தரபாண்டியன், அந்தோணிராஜ் கண்டன உரையாற்றினர்.
தொடக்கக் கல்வித்துறையில் 60 ஆண்டுகளாக இருந்த ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றியமைக்க எந்த சங்கத் திடமும் கருத்து கேட்காமல் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.