/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'ராங்' ரூட்டில் வந்த பஸ் மோதி ஊழியர் காயம்
/
'ராங்' ரூட்டில் வந்த பஸ் மோதி ஊழியர் காயம்
ADDED : ஏப் 21, 2025 11:11 PM
நெல்லிக்குப்பம்::
'ராங்' ரூட்டில் வந்த அரசு பஸ் மோதியதில், பைக்கில் வந்த தனியார் நிறுவன ஊழியர் காயமடைந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த கருப்புகேட் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை கடலுாரில் இருந்து வந்த தனியார் பஸ்சில் இறங்கினர். அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சாலையின் நடுவில் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது கடலுாரில் இருந்து உளுந்துார்பேட்டை செல்லும் அரசு பஸ் டிரைவர், முன்னால் தனியார் பஸ் நின்றிருந்ததால் அலட்சியமாக ராங் ரூட்டில் தடுப்பு கட்டையின் மறுபுறம் வேகமாக சென்றார். அப்போது, கடலுார் செம்மண்டலத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முத்துகுமார் ஓட்டி வந்த பைக் மீது பஸ் மோதியது. இதில், காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.