/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விடுபட்டவர்களுக்கு போனஸ் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
/
விடுபட்டவர்களுக்கு போனஸ் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
விடுபட்டவர்களுக்கு போனஸ் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
விடுபட்டவர்களுக்கு போனஸ் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : ஜன 12, 2025 06:33 AM
கடலுார் :   விடுபட்ட அனைத்து பணியாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
கடலுாரில் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பில், கடந்த காலங்களை போலவே எந்தவித மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், விடுபட்டுள்ள அரசு பணியாளர்களுக்கு போனஸ் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உள்ளாட்சியில் பணிபுரியும் துாய்மை காவலர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவினருக்கு வழங்கி மற்றொரு பிரிவினருக்கு வழங்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. உள்ளாட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கவில்லை.
சமீபகாலமாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது படிப்படியாககுறைக்கப்பட்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை.12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்கவில்லை. எனவே
தமிழக அரசு விடுபட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

