ADDED : ஜன 13, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
முகாமில் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே, வரும் 19ம் தேதி கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
முகாமில் தேர்ந்தெடுக் கப்படும் பதிவுதாரர் களின் பதிவுஎண் வேலை வாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது.
இத்தகவலை கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித் துள்ளார்.