/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி ஏற்பாடு
/
வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி ஏற்பாடு
ADDED : ஆக 20, 2025 07:41 AM
கடலுார் : சிதம்பரத்தில் மகளிர் திட்டம் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் தொழிற்கல்வி, பொதுக்கல்வி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இன்ஜினியரிங் பிரிவில் நடக்கிறது.
முகாம் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி ஆணை வழங்குகிறது.
முகாமில் பங்குபெறும் இளைஞர்கள், தங்களது அசல் கல்வி சான்றுகள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதிசான்று, இருப்பிட சான்று, வருமானச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சுய முகவரி எழுதிய அஞ்சல் உறை ஆகியவையுடன் பங்கேற்க வேண்டும்.
முகாமில் கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, கீரப்பாளையம், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்னம், காட்டுமன்னார்கோவில், மங்களூர், நல்லுார், விருத்தாசலம் வட்டார இளைஞர்கள் பங்கேற்கலாம்.
மேலும், விபரங்களுக்கு கடலுார் பூமாலை வணிக வளாகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தை 9444094260, 9444094261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.