/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
கடலுாரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஏப் 26, 2025 06:30 AM
கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனையின்படி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை 27ம் தேதி கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைக்கிறார்.
எம்.ஆர்.எப்., ஹூண்டாய், பிரேக்ஸ் இன்டியா மற்றும் தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் பங்கேற்று பத்தாம் வகுப்பு முதல் முதுகலைபட்டதாரி வரையிலான இளைஞர்களுக்கு பணி வழங்க உள்ளன.
கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, சுய விபரம், ஆதார் அட்டை நகல் 3 எடுத்துக்கொண்டு முகாமில் பங்கேற்கலாம். ஏற்பாடுகளை டாக்டர் பிரவீன் அய்யப்பன் செய்து வருகிறார்.