/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேரோடும் வீதியில் 'மீண்டும்' ஆக்கிரமிப்பு
/
தேரோடும் வீதியில் 'மீண்டும்' ஆக்கிரமிப்பு
ADDED : மார் 05, 2026 04:46 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரத்தில் மேலவீதி, கீழ வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய தேரோடும் வீதிகள், முக்கியமானவையாக உள்ளன.
இதில் கடைவீதி அமைந்துள்ள மேலவீதியும், கோவிலின் பிரதான வாயிலான கீழவீதியும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இந்த முக்கிய வீதிகளில் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து வீதிகள் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக, மேலவீதி, கீழவீதி மற்றும் தெற்கு வீதியில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
சாலையை அடைத்து கடைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
தள்ளுவண்டி கடைக்காரர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் சாலையில், இருபுறமும் மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கி யுள்ளனர்.
இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் சாலையில் செல்ல வேண்டியுள்ளது. வாகன நெரிசலும் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
முக்கிய வீதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகளை, அகற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

