ADDED : மார் 05, 2026 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: காய்கறி பெட்டியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பை, தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
விருத்தாசலத்தை சேர்ந்தவர் குமார் மகன் சதீஷ். கடலுார் சாலையில் தற்காலிக காய்கறி கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை 7:00 மணியளவில், காய்கறி பெட்டிகளை எடுத்தபோது, அதற்குள் கொடிய விஷத்தன்மையுடைய பாம்பு இருந்தது தெரிந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் வந்து, 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை பத்திரமாக மீட்டனர்.
கவனிக்காமல் பெட்டியை தொட்டிருந்தால், உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் என தீயணைப்பு வீரர்கள் எச்சரித்தனர். தொடர்ந்து, கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் பாம்பு பத்திரமாக விடப்பட்டது.

