ADDED : மார் 30, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, : பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அருகே உடையூர் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் மகன் பாலாஜி,26; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர். இவர், 19 வயது இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி நெருங்கி பழகினார். இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு பாலாஜி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, பாலாஜியை கைது செய்தனர்.